இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார்.
சிட்னியில் வசித்துவந்த அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாலேயே மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் அருகில் யாரும் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஜிதனின் மரணம் இயற்கையாக ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதிலும், அவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
மேலும், அஜிதனின் உறவினர்கள் யாரும் அவுஸ்திரேலியாவில் இல்லாததால், அவரது உடலை இலங்கைக்கு கொண்டுசெல்வதா அல்லது அவரது உறவினர்களை இங்கு வரவழைப்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிமல் தெரிவித்தார்.
பல்வேறு சிரமங்களுடன் ‘மெராக்’ கப்பலில் வந்த அஜிதன் கடந்த 2013ஆம் ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியவராவார்.