வடமாகாணத்தில் சமூக சேவைத் திணைக்களம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவு!

314 0

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெயோல் செல்வநாயகத்தின் நிதிப் பங்களிப்பில் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அ.பத்திநாதரின் வழிநடத்தலில் கொரோனா இடர் நிவாரணப் பணிகள் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இன்று (14) காலை ஆரம்பமானது.

இதன்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி ச.மோகநாதன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், கிராம அபிவிருத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாணத்தில் சமூக சேவைத் திணைக்களம் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 4000 ரூபா வரையான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.