ஏழு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும், தனது எதிர்ப்பை நேற்று (13) தெரிவித்துள்ளார்.
அமைச்சுகளுக்குச் செயலாளர்களை நியமிக்கும் போது, அரசில் உயர் பதவிகளை வகிக்கும் நிர்வாகம் தெரிந்த அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு எதிர்ப்பை தெரிவித்து, விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறக்கூடிய அமைச்சுகளுக்கு, நிர்வாகம் தொடர்பில் அனுபவமில்லாதவர்களை நியமிப்பதன் ஊடாக, பல்வேறான பிரச்சினைகள் ஏற்படுமென, ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.