பெண்களை கடத்தும் செயற்பாடு – இரண்டு பேர் கைது

253 0

fotor041711435இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் பெண்களை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுமார் 100க்கும் அதிகமான இலங்கைப் பெண்களை மாலைத்தீவுற்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கைதான இரண்டு பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.