மே பன்னிரெண்டாம் நாள்
நினைவதில் முள்ளிவாய்க்கால்!
********
எட்டாத் தண்ணீரில் தத்தளிக்கும் உயிரொன்று
முங்கியெழும் போதெல்லாம் கூப்பிடும் குரல்போல….
கொட்டும் குண்டுகள் குழியுள் எமைமூட
அங்கிருந்து நாமெல்லாம் அழுது கேட்டோமே!
ஐநா வருமென்றும் அமேரிக்கா புகுமென்றும்
கையில் உயிரேந்திக் காத்திருந்த நாளும் போய்…
பொய்தான் அவையென்ற மெய்யை மனமுரைக்க
கைகள் உயர்த்தும் கதியில் நாமங்கே!
சாவுகள் என்பதோ நாளுக்குப் பலநூறாய்
கூடும் அளவிற்குக் கொடூரக் கொலைக்களங்ககே…
வேவுகள் பார்த்துச் சென்ற நல்லவர்கள்
கூடிக் களம்புகுந்த துரோகத் தனங்களங்கே!
யார் காண்பார்? யார் கேட்பார்?
-வன்னியூர் குரூஸ்-