இலங்கையில் உறவு குறித்து மகாராணியுடன் கலந்துரையாடல்

328 0

Queen Elizabeth II shakes hands with Her Excellency Ms Amari Mandika Wijewardene the High Commissioner of Sri Lanka, before she presents her Letters of Commission at a private audience with Her Majesty, in Buckingham Palace, central London.

இலங்கையில் உறவு குறித்து பிரத்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபெத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் அமரி மந்திக விஜேவர்தன, இன்று பிரத்தானிய மகாராணியிடம் தமது நியமன கடிதத்தை உத்தியோக பூர்வமாக  கையளித்தார்.

பக்கிங்ஹோம் மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை அடுத்து, இருதரப்பினரும் சுமூகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துச் செய்தியை மகாராணிக்கு உயர்ஸ்தானிகர் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், இலங்கையுடனான நல்லுறவு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.