மஹிந்த வலுக்கட்டாயமாகவேனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைத்துக் கொள்யப்படுவார் – பெசில்

270 0

basil-450x318முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வலுக்கட்டாயமாகவேனும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைத்துக் கொள்யப்படுவார் என தெரிவிக்கட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உருப்பினருமான பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கன்னி ஊடக சந்திப்பில் வைத்து அவர் அதனை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜீ.எல் பீரிஸ், தற்போது அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிறப்புவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், சுந்திர கட்சியின் உண்மையான கொள்கைகள் ஐக்கிய தேசிய கட்சியிடம் காவு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைளை மையப்படுத்தி பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டார்.