ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில், சுதத்திர கட்சியைச் சேர்ந்த எவரும் இணையப் போவதில்லை – மஹிந்த அமரவீர

278 0

mahinda-amaraweera1முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில், ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியைச் சேர்ந்த எவரும் இணையப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியை பிளவுப்படுத்த பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

எனினும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தற்போது ஜீ.எல் பீரிஸ் தலைமையில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுவும் வெற்றிப்பெற போவதில்லை எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.