அவுஸ்ரேலிய இங்கிலாந்து விசா விண்ணப்ப நிலையம் கொழும்பில் இன்று திறப்பு

289 0

blog6அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், கொழும்பில் புதிய மேலதிக விசா விண்ணப்ப நிலையத்தை திறந்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் தலைமையில் இந்த அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விசா விண்ணப்ப நிலையம் ஆனோர்ல்ட் ரத்நாயக்க மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக பல விண்ணப்பங்களை ஏற்றுகொள்ள கூடியதாக இருக்;கும் எனவும் இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையம் திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 9 மணி முதல் 2 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.