கொழும்பு மாவட்டத்தின் பல பாடசாலைகள் டெங்கு நுளப்பு பரவுவதற்கான ஏதுவான சூழலை கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பில் சுமார் 48 பாடசாலைகளில் இவ்வாறான டெங்கு பரவுவதற்கான ஏதுவான சூழ்நிலை நிலவுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 48 அரச நிறுவனங்களிலும் 53 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் இவ்வாறான டெங்கு தொற்றும் அபாயம் நிலவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே பல தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.