திருக்குறள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் – மாவை

5186 0

SLT-mavaiஉலக பொதுமுறையான திருக்குறள் சொல்லுகின்ற ஒழுக்கத்தை பின் பற்றி வாழ்வதன் மூலம்தான் நாங்கள் உலகில் நாகரீக உள்ளவர்களாக இருக்க முடியுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 13வது திருக்குறள் மாநாடு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உலகத்தில் ஒழுக்கமுள்ள சமுதாயம் தான் உயர்ந்த நாகரீகத்தை அடைந்ததாக சொல்லப்படுகின்றது.
நாகரீகம் என்பது ஒரு சமுதாயம் இன்னுமொரு கலை கலாச்சாரத்தை பின்பற்றுவதோடு அதன் உடைகளை மாற்றிக்கொள்வதில் மட்டும் உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பதில் மட்டும் அந்த ஒழுக்கம் தங்கியிருக்கவில்லை.
தங்களுடைய தாய் மொழியை தாயை தங்களுடைய கலை கலாச்சாரத்தை நாங்கள் தமிழர்களாக இருப்பதால் எங்களுடைய மண்ணும் தமிழ் நிலம் என அழைக்கப்படுகின்றது.
தாய் மொழியை கலை கலாச்சாரங்களை எந்த மக்கள் கூட்டம் இழந்து நிற்கின்றதோ அந்த மக்கள் கூட்டம் அழிந்திருக்கின்றது. அந்த நிலம் அழிந்திருக்கின்றது.
அப்படியானால் உலகில் அந்த ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்கள் தான் உலகத்தில் உயர்ந்த நாகரீகமுள்ளவர்களாக உயர்ந்த நாட்டை ஆட்சி செய்பவர்களாக விடுதலை பெற்றவர்களாக சுதந்திரம் பெற்றவர்களாக வாழ்கின்றனர் என்றும் அடிமைகளாக அழிந்து போனவர்கள் அல்ல என்றும் சொல்லப்படுகின்றது.
இவ்வாறு இந்த திருக்குறள் இதனை ஒத்து வந்துள்ளது. ஒழுக்கம் உயிரிலும் ஓப்பப்படும் என்பது தான் மிக முக்கியமானது.
உயிரை விட ஒழுக்கம் தான் மிக உயர்ந்தது என்று சொல்லப்படுகின்றது. இந்த ஒழுக்கத்திற்காக உலகத்திலே எத்தனையோ போர்கள் நடைபெற்றிருக்கின்றன.
இந்த ஒழுக்கத்திற்காக எங்களுடைய தேசத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை அந்த நாகரிக ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்கு விலையாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எமது வீடுகளிலே பாடசாலைகளிலே சமுகத்திலே ஒழுக்கம் உயிரிலும் ஒப்பப்படும் என்றதற்கு இணங்க குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என எத்தனையோ உயிர்கள் இந்த மண்ணிலே விலையாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எங்களிடம் ஒழுக்கம் மிக குறைந்து விட்டது. அதாவது மது அருந்துதல் கொலைகள் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் கொள்ளைகள் போதைவஸ்த்து என்பன மிக உச்சமாகக் காணப்படுகின்றது.
இவற்றின் சின்னமாக வித்தியாவின் கொலை இடம்பெற்றிருக்கின்றது.
கல்வியில் உயர்ந்திருக்கின்ற ஒரு சமுதாயம் இன்று போருக்குப்பின்னர் அதனை இழந்து நிற்கின்றது. இதனை ஆராய வேண்டும் போர்க்காலத்தில் வீழ்ச்சியடையாத கல்வி போர் முடிந்ததற்கு பின்னர் ஏன் வீழ்ச்சியடைந்தது. தினமும் தொகையான கஞ்சா மீட்கப்படுகின்றது. மாணவர்கள் மது போதையில் இருக்கின்றார்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.
இப்படியென்றால் ஒழுக்கம் என்பதற்கு என்ன அடையாளம் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் தான் நாங்கள் உலகில் நாகரீகமுள்ளவர்களாக இருக்கமுடியும் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

Leave a comment