வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாதீட்டு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைப்பெற்றது.
இதன்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சிதலைவருமான இரா.சம்பந்தன் இதனை இன்று தெரிவித்தார்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை, அவர்களது சொந்தக்காணியில் மீள் குடியமர்த்தவே, தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்கள் விரும்புவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு.
அதனையே தமிழ் மக்களும் விரும்புவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.