எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்ட 11 இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஹீல் ஷெரீப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடைப்பெற்று வரும் தாக்குதல்கில் பாகிஸ்தானிய வீரர்கள் 7 பேர் எல்லையில் பலியானதாக தகவல் வெளியான நாளன்றே, இந்திய வீரர்கள் 11 பேரை கொன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மை காலமாக நடைபெற்று வரும் தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் வரையில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய இராணுவத் தளபதி தெரிவித்தார்.