போதைப்பொருள் வர்த்தகரான கம்பொல விதானகே சமன்த குமார எனப்படும் வெலே சுதாவின் 42 கோடி ரூபா பணத்தை தமது வங்கி கணக்குகளில் வைப்பிலிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவரது உறவினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு முதன்மை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.