வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்- முதல்வர்

315 0

வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒருவாரத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழக அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8 ரெயில்களில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரெயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.