சட்டமா அதிபருக்கு அழைப்பு

279 0

tissa-attanayake-48545845எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மீள் பரிசீலனை மனு மீதான விசாரணையின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கள் இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்வைக்குமாறும் மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற வழங்கிய தீர்பை வலுவிலக்க செய்து உரிய பிணை ஒன்றின் மூலம் விடுவிக்குமாறு கோரி திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள்பரிசீலனை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.