கையில் மை வைக்க நாம் குற்றவாளிகளுமல்ல..அடிமைகளுமல்ல..
நம்மை குற்றப்பரம்பரையாக்கும் சர்வாதிகார மோடி அரசினைக் கண்டித்து அரசியல் போராட்டத்திற்கு அணி திரள்வோம்.
நம்மை குற்றவாளிகளாக நடத்தி, கார்ப்பரேட், தனியார் வங்கிகளுக்கு நாம் உழைத்து சேமித்த பணத்தை தாரை வார்க்கும் ‘சர்வாதிகாரி’ மோடி பாஜக அரசிற்கு எதிராகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க நவம்பர் 20 மாலை வள்ளுவர் கோட்டத்தில் நிகழும் மக்கள் திரள் கூட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள். அடிமைக் கூட்டங்களாய் நடத்தப்படுவதை எதிர்ப்போம்
வரும் நவம்பர் 20ம் தேதி மாலையில், மக்களை குற்றவாளிகளாய் நடத்தி, பணக்காரர்களுக்கு பங்காளி வேலை பார்க்கும் பாஜக மோடி அரசுக்கு எதிராய், உழைக்கும் மக்களுக்கு துணையாய் குரல் கொடுக்க வீதிக்கு வா.
வ்ள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம். ஏழை எளியவருக்கு, வறியோர், உழைப்போருக்கு ஆதரவாய் நாம் நிற்காவிடில் யார் நிற்பார்.?
இன்று போராடவில்லையெனில் என்று போராடுவது.
இதற்கு மேலுமிந்த அக்கிரமங்களை பொறுக்க இயலாது. நம் முழக்கம் தில்லி ராஜ்யத்தின் திமிரை உடைக்கட்டும்
போராட வா தோழா. நண்பர்களோடு களத்துக்கு வா
நவம்பர் 20, ஞாயிறு, மாலை 4 மணி,
வள்ளுவர் கோட்டம்,
சென்னை.
9884072010
காணொளி
ரூபாய் நோட்டுகளை தடை செய்வதால் ஏழை எளிய மக்கள் வீதிக்கு தள்ளப்படுவார்களே ஒழிய, கருப்புப் பணம் ஒழியப் போவதில்லை.எங்களுக்கு கிடைத்த மிகக் குறுகிய நேரத்தில், ஊடக நெருக்கடியில் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறோம். மக்களிடத்தில் இதை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம்.மே பதினேழு இயக்கம்For Youtube: https://www.youtube.com/watch?v=z46XXwDv_G4&feature=youtu.be
Gepostet von May17 Movement am Samstag, 12. November 2016
சத்யம் தொலைக்காட்சியில் கருப்பு பணம் குறித்து மே பதினேழு இயக்கம்
நவம்பர் 14 மாலை 7:00 மணிக்கு சத்யம் தொலைக்காட்சியில் கருப்பு பணம் குறித்து நடைபெற்ற சத்யம் சாத்தியமே விவாத நிகழ்ச்சியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்று தனது கருத்துகளை பதிவு செய்தது.தமிழக மக்களே! நாம் உழைத்து சம்பாதித்து சேமித்த பணத்தை நம்மிடம் இருந்து பிடுங்கி, நம்மை கொத்தடிமை போல நடத்தும் பா.ஜ.க.-ஆ.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டுவோம் களப்போராட்டத்திற்கு வாருங்கள்!சர்வாதிகார மோடி அரசினைக் கண்டித்து அரசியல் போராட்டத்திற்கு அணி திரள்வோம்.நவம்பர் 20, மாலை 4 மணிவள்ளுவர் கோட்டம், சென்னை.9884072010- மே பதினேழு இயக்கம்
Gepostet von May17 Movement am Mittwoch, 16. November 2016