சம்பந்தக் குழந்தையின் இன்னோர் நிழல்

276 0

நீதிக்கு அரசர் இவர்
விக்கினங்கள் தீர்ப்பார் என்றீர்
10 இற்கு வாக்களித்தால்
13 பிளஸ் கிடைக்குமென்றீர்
மனுசனுக்கு கொழும்பை விட்டால்
வேறு எதுவும் தெரியாது

சிவனே என்று இருந்த
பிறேமானந்த சீடரை
மேட்டுக் குடி நிலைநின்று
முக்தி பெறா பக்தரை
றோட்டெல்லாம் இழுத்துவந்தீர்
கையில் வேல் கொடுத்து கடவுள் என்றீர்

மக்கள் பேரவை என்று
இருட்டில் சிலர் கூடி
இரகசியமாய் இவரை
இணைத் தலைவர் என்றீர்
இருண்டதும் விடிந்ததும் இவருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பாவம் இவர் என்செய்வார்
பக்கம் பக்கமாய் பேச்சுகள் எழுதுவதால்
மக்கள் குறை அறிய நேரமில்லை
ஆரும் சொல்லி அழைத்துச் சென்றால்கூட
கேள்விகள் கேட்டால் சினங்கொண்டு
புறங்காட்டிச் சென்றிடுவார்

தலைமை அமைச்சரிவர்
அவைக்கு வருவதே அரிதுதான்
தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்
திறமைசாலி – நாலுவருசத்தில்
நானூறு ஆகிடுமாம் குப்பையில் கூட
உக்கிடாத் தீர்மானங்கள்

விக்கினங்கள் தீர்க்க அவதரித்தவர்
அரசியல் பழகட்டுமெண்டு இன்னமும்
நாங்கள் தான் காத்துக்கிடக்கிறோம் – ஆனால்
காலம் ஒருநாள் சொல்லும் இவர்
மென்வலுவை மிஞ்சிய வன்மம் என்று
சம்பந்தக் குழந்தையின் இன்னோர் நிழல் என்று

அதுவரை………………………

அ.யசீகரன்