சிறிலங்காவில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை

287 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு சுற்றறிக்கை நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் கிருமி நீக்கம், மாணவர்களுக்கு நீர் வழங்க பயன்படும் நீர் குழாய் இணைப்புகள் மற்றும் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் ஆலோசனையுடன் ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

எனவே இவ்வாறு முன்மொழியப்பட்ட திட்டத்தை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் குறித்த சுற்றறிக்கை மாகாண கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.