வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

356 0

ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அரசகாடுகளில் சட்டவிரோத மதுபான வடித்தல், மிருக வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிருக வேட்டைக்காக வந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.