யாழில் வீடு புகுந்து சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல்

607 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு வீடுகளுக்குள் புகுந்த சிறிலங்கா  இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வயோதிப பெண்உட்பட பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதுசிறிலங்கா இராணுவத்தினர் என்றும், அவர்கள் இராணுவ இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் கையடக்க தொலைபேசியை கை விட்டு சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.