சிறிலங்கா அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது-அரவிந்த குமார்

302 0

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலக கடித தலைப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இவ்வாறான கோரிக்கை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே அதனை ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட கோரிக்கையாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தேவையில்லா தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கம் முற்படும் நிலையில் இவ்வாறு அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை கேட்பது தேர்தலுக்கான செலவீனத்தை ஈடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.