உலகம் முழுதும் கரோனா வைரஸ் | கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரித்திருக்கலாம்- உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து 40,14,436 ஆக அச்சுறுத்துகிறது. பலி எண்ணிக்கை 2,76,251 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே ஆறுதல் செய்தி 13 லட்சத்து 87 ஆயிரத்து 230 பேர் குணமடைந்துள்ளனர் என்பதே.
ஆனால் சில நாடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் நிலை எட்டப்பட்டிருக்கலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி குன்றிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கரோனா உச்சம் பெறலாம் என்று ஐநா மனிதார்த்த உதவித் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். இதனால் கரோனாவினால் ஏற்படும் பாதிப்புக்கான நிவாரணத்துக்காக ஏழை நாடுகளுக்கு உதவும் வண்ணம் 6.7 பில்லியன் டாலர்கள் தேவைப்படலாம் என்று உலக நாடுகளிடம் ஐநா முறையிட்டுள்ளது.
பெனின், ஜிபவுட்டி, லைபீரியா, மொசாம்பிக், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சியெரா லியோன், டோகோ மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் உதவிப்பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டமும், பசியும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும். “இரண்டு வறட்சிகள் நம்மை அச்சுறுத்துகின்ற்ன. உலக உணவுப்பற்றாக்குறையை எதிர்நோக்குகிறோம்” என்கிறார் உலக உணவுத்திட்ட ஐநா செயல் இயக்குநர் டேவிட் பியஸ்லி.
அதாவது கரோனா பெருந்தொற்று முடிந்தவுடனேயே நாம் பட்டினிப் பெருந்தொற்றை எதிர்கொள்வோம் என்று ஐநா எச்சரிக்கிறது.
உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், உதவி கோரும் வளரும் நாடுகள் பட்டியல் குறைவாக இப்போதைக்கு தோன்றலாம், ஆனால் இந்நாடுகளில் கண்காணிப்பு, மருத்துவ சோதனை நிலவரங்கள், மருத்துவ அமைப்பகளின் திறன் மிக மிகக் குறைவு என்பதை நாம் அறிவோம்.
எனவே இதுவரை கண்டுபிடிக்கப்படாத கரோனா வைரஸ் | கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரித்திருக்கலாம்- உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை சமூகப் பரவல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்றார். இந்தியாவில் ஜூலைகளில் கரோனா எகிறும் என்று எய்ம்ஸ் இயக்குநர் கூறுவதும் இதனடிப்படையிலேயே.
எனவே நன்கொடை அளிக்கும் நாடுகள் ஒற்றுமையுடனும் தாங்களாகவே மனமுவந்தும் வைரஸ் பரவல் அளவுக்கு ஏற்ப நன்கொடைகளையும் அதிகரிக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.