சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். இவர்களில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, மாவட்டத்தில் கரோனாவால் பாதித்த 16 பேர் சிகிச்சை பெற்று அனைவருமே வீடு திரும்பினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 பேரில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 2 நாட்களுக்கு முன் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, பத்தமடையில் ஒரு பெண், வள்ளியூர் அருகே சித்தூரில் 2 பேர், மேலப் பாளையத்தில் ஒருவர் என மாவட்டத்தில் புதிதாக மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதித்த 51 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று சேர்ந்த மரத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதியானது. தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள இவர், கோயம்பேட்டில் இருந்து வந்தவர்.
சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புவோரால் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங் களில் கரோனா தொற்று பரவு கிறது என மக்கள் அச்சமடைந் துள்ளனர்.