தாஜூடின் மரணம் குறித்த விசாரணைகளை விரைவாக நடத்த உத்தரவு

327 0

201611112304471937_election-violation-admk-and-dmk-complaint-in-tanjore_secvpfறகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்படுவதால் எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாஜூடினின் மரணம் நிகழ்ந்தமைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவரது நண்பரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பு குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதாக, இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.