சென்னையில் கொரோனா வைரசுக்கு மேலும் 3 பேர் பலி

279 0

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று பலியாகினர்.

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டுட்ம சென்னையில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2644 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகியோர் ஒருவர் இன்று உயிரிழந்தனர்.
இதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாம்பரத்தைச் சேர்ந்த 76 வயது நபரும் இன்று உயிரிழந்தார். சூளைமேட்டைச் சேர்ந்த மூதாட்டிக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.