சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு 60-ஆக உயர்வு

266 0

சென்னை காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. அந்த வகையில் சென்னை காவல்துறையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை காவல்துறையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தெரு முழுவதும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.