சிறிலங்காவில் அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டம்

306 0

சிறிலங்காவில் சேலைன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் பெருமளவு நிதியை சேமிக்க முடியும்.

1987 ஆம் ஆண்டு ஜப்பான் நன்கொடையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் மூலம் நாட்டுக்கு தேவையான மருந்துகளைத் தயாரித்து, நடைமுறையில் உள்ள வர்த்தக அதிகாரத்திலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

இதுவே சிறிலங்காவில் மருந்து தயாரிப்பில் ஈடுபடும் ஒரே உஒரு அரச நிறுவனமாகும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைப்படி ஜி.எம்.பி தேவைகளின் கீழ் செயல்படும் சிறிலங்கா மருந்தாக்கட் கூட்டுதாபனத்தில் தற்போது சிறிலங்காவின் மருந்து தேவைகளில் 12 வீதம் முதல் 15 வீதம் வரை பூர்த்தி செய்யப்படுகின்றது.

தற்போது பாசிடோல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் பெரசிட்டமோல் வில்லைகள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது,

சிறிலங்கா மருந்தாக்கட் கூட்டுதாபனம் தூசி துகள்கள் அற்ற சிறந்த சுகாதார நடைமுறைகளுடன் உயர் தரமான மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றது.

30 வருட காலமாக மருந்து தயாரிப்பு அனுபவத்தை கொண்ட சிறிலங்கா மருந்தாக்கட் கூட்டுதாபனம் தற்போது மருந்துத் துறையில் புதிய இலக்குகளை அடைய புதிய தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தவுள்ளது.