பாகிஸ்தானில் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு

342 0

201611171058269713_pakistan-orders-100-turkish-teachers-to-leave-the-country_secvpfசர்வதேச பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஆட்சியை கவிழ்க்க திடீர் ராணுவ புரட்சி நடைபெற்றது. இந்த புரட்சியை அதிபர் ரி‌ஷப்தாயிப் முறியடித்தார்.

இந்த புரட்சிக்கு அமெரிக்காவில் வசித்து வரும் மதகுரு பெதுலாகுலான் தான் காரணம் என்று அதிபர் ரி‌ஷப்தாயிப் குற்றம் சாட்டினார். இவரது ஆதரவாளர்கள் நடத்தும் சர்வதேச பள்ளிகள் பல பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன. இங்கு துருக்கியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் துருக்கிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் துருக்கி அதிபர் ரி‌ஷப்தாயிப் பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவர் பிரதமர் நவாஸ்செரீப்பை சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் செயல்படும் அந்த பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக நவாஸ்செரீப்பிடம் பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.