பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி

317 0

201611171155130107_opposition-parties-uproar-in-parliament-today_secvpfரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து அந்த நோட்டுக்களை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இப்பிரச்சினை பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதையடுத்து இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று விவாதம் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் இதுபற்றி விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது. குறிப்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி கோஷமிட்டது.

மாநிலங்களவையிலும் காங்கிரஸ், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் காலை 11.30 வரையிலும், பின்னர் 12 மணி வரையிலும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.