பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது கூட்டத்தொடரிலே நேற்றும், நேற்று முன்தினமும் சிறீலங்கா தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போதே சிறீலங்கா அரசாங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டம் தொடர்பாக சித்திரவதைகளுக்கெதிரான ஐநா விசாரணைக்குழுவினால் சிறீலங்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது, குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட எவரும் தடுப்புக்காவலில் இல்லையென்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களும் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் எனவும் சிறீலங்கா குழு தெரிவித்திருந்தது.