யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 75 இலட்ச ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கஞ்சா கடத்தல் ஒன்று இடம்பெறுவதாக இளவாலை பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்ததை அடுத்து, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மாதகல் கடற்கரைக்கு அண்மையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த நபரொருவரையும் அவரது உடமைகளையும் பொலிஸார் சோதனையிட்டிருந்தனர்.
குறித்த நபரிடம் சுமார் 75 இலட்சம் ரூபா பணம் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்ததுடன், 10 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
இதேவேளை நேற்றையதினம் மாதகலிலிருந்து கொழும்புக்குக் கடத்திச் செல்லப்பட்ட 70 கிலோ கிராம் கஞ்சா வவுனியாவில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரைக் கைதுசெய்த இளவாலை பொலிஸார், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணம் என்பவற்றையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.