மட்டு விவசாயிகளுக்கு அம்பாறையில் இருந்து நீர் கடன்வாங்கல்

357 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத்தொடர்ந்து சேனநாயக சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயம் செய்கை பண்ணப்படவேண்டிய இரண்டாயிரத்திதொலாயிரத்தி என்பது (2980) ஏக்ருக்கான அனுமதிமாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக ஜநூறு (500) ஏக்கர்களை மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரனத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்து நீரை பாவிப்பதுதொடர்பாக மத்திய நீர்ப்பாச நிணைக்களத்துடன் உரையாடியபோது பிரதிப்பணிப்பாளர் எம்.வி.எம்.அசார் நவகிரி கன்ட விவசாயிகளுக்கு போதுமான நீர்மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நீர் கடன்பெற்று விவசாயிகளின் விளைநிங்களை காப்பாற்றிய பெருமைக்குரியவர் எமது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா என இன்று விவசாய அமைப்புக்கள் பாராட்டி புகழ்ந்தனர். வரலாற்றில் என்றும் நடைபெறாத ஒரு திட்டத்தினை எம்மக்களுக்காக செயல்வடிவம் பெறவுள்ளமை சிறப்புக்குறிய விடையமாகும். அந்தவகையில் அம்பாறை சேனநாயக்க சமூத்திரத்தில் இருந்து நவகிரிக்கும் அங்கிருந்து ஆற்றுப்பாச்சல் ஊடாக 47ம் 49ம் 51ம் 52ம் மற்றும் கடுக்காமுனை 3ம் 4ம் வாய்கால் மூலம் புளுக்குணாவிக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்டிருப்பு நிர்ப்பாசன பொறியலாளர் எஸ்.சுபாகரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரத்திணை புனரமைக்கப்படும் போது 1956ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாதான உடண்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு நவகிரிக்கு நீர்தேவை ஏற்ப்படும் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நீர் வழங்குவதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது அதனை இம்முறைதான் 1956ம் ஆண்டுக்குப்பிறகு நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.