அமெரிக்கா – ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் பலி

368 0

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 500ஐ தாண்டியது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்குகிறது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 64 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 933 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.