பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது கொரோனா நெருக்கடி – டிரம்ப்

383 0

கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாடு பிற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
அங்கு ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் திறந்து விடுகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் நடந்த பியர்ல் ஹார்பர் தாக்குதல் அல்லது இரட்டை கோபுரம் தாக்குதல் (செப்டம்பர் 11-ம் தேதி) சம்பவத்தை விட மிக மோசமானது கொரோனா வைரஸ் நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.