சிறிலங்காவில் இம்மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 30,000 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 1,396 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விவரங்களின்படி, பெப்ரவரி 18 முதல் நேற்று வரை மொத்தம் 29,283 பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஏப்ரல் 26 வரை தினமும் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 27 அன்று அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகள் (1869) நடத்தப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.