எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் பரீட்சைகள் முடிவடையும் வரையில் வகுப்புகள், வழிகாட்டல் கருத்தரங்குகள், பரீட்சை தொடர்பிலான செயலமர்வுகளை நடாத்த முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.ஜே.எம். புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
தேசிய பரீட்சை நடைபெற ஐந்து நாட்களுக்கு முன்னதாக வகுப்புக்கள், கருத்தரங்குகளை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த உத்தரவினை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.