டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

413 0

டெல்லியில் மேலும் 206 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15ஆயிரத்து ஐநூறை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆனது என தெரிவித்துள்ளது.