சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்த போது மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்தவர் பார்த்தசாரதி. இவர் கடந்த செப்டம்பரில் கிண்டி அருகே மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முயன்றார். அவர் ஒடும் ரயிலில் இருந்து வெளியே தலையை மட்டும் நீட்டியவாறு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் தலை பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்தசாரதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.