பதவியேற்று இரு வருடப் பூர்த்தியை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட மைத்திரி முடிவு

346 0

1762289927maithiri2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை தேவையற்ற முறையில் விழாக்களோ அல்லது நிகழ்சிகளோ இன்றி கொண்டாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இது குறித்து மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விரைவாக செய்து முடிக்கக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.