தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் கைது

367 0

y5bjwnpதௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை மாளிகாவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பிரதீப மாவத்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும் மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அப்துல் ராசிக்கின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனைக் கண்டிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு மெகசின் சிறைச்சாலை முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.