சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது.
திரு.வி.க.நகரில் 357 பேருக்கும், ராயபுரத்தில் 299 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 257 பேருக்கும், அண்ணாநகரில் 144 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் மற்றும் செயலர், மண்டல வாரியான சிறப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.