மே இறுதிவரை ஊரடங்கை நீட்டிக்க ஜப்பான் அரசு முடிவு

264 0

ஜப்பானில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை கட்டுப்படுத்த பிரதமர் ஷின்சே அபே முடிவு எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை டோக்கியோ கவர்னர் யுரிகோ உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே விரைவில் இந்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் மே 7-ல் ஜப்பான் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்று கூறிய நிலையில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கரோனா வைரஸுக்கு 14,877 பாதிக்கப்பட்டுள்ளனர்.487 பேர் பலியாகினர். 3,981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியம் என்றும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இயலாது என ஜப்பான் முன்னரே தெரிவித்துவிட்டது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.