வங்கியில் நிதி மோசடி – இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

269 0

arrests3கட்டுநாயக்க – எவரியவத்தை பகுதியில் வங்கிக் கணக்கில் நிதி மோசடி செய்த பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தயாரித்து, வங்கிக் கணக்கிலுள்ள நிதியை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் பதுளை, மோதரை, தெஹிவளை, நுவரெலியா மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.