சிறுநீரகம் செயலிழப்பு – சுஸ்மா வைத்தியசாலையில்

305 0

timthumbசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகான பரிசோதனைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுஸ்மா கடந்த 7ஆம் திகதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாகவும் அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் தனது உடல்நிலை தொடர்பாக சுஸ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன்.

தற்போது டயாலஸிஸ் செய்யப்படுகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடவுள் கிருஸ்ணன் என்னை காப்பாற்றுவார்’ என ட்வீட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை விரைவில் சீரடைய வாழ்த்து தெரிவித்து பொதுமக்கள், பிரபலங்கள் பலர் ட்வீட்களை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நிமோனியா நோய் தாக்கத்துக்காக சுஸ்மா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது