முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றுள்ளார்.
இது தொடர்பில் அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் தமது கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அது தொடர்பில் பின்னர் அறிவிப்போம் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.