தனது ஆட்சியில் அதிக கடன் பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டினாலும் தானன்றி நீங்களே இன்று குற்றவாளி கூண்டில் இருக்கிறீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் பெருந்தொகை காணியை வெளிநாட்டவருக்கு விற்று இலங்கையை வெளிநாட்டு கொலனியாக மாற்றும் ஆபத்தான திட்டத்திற்கு அரசாங்கம் தயாராகிறது.
இதற்கான யோசனைகளே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
துறைமுகம், நெடுஞ்சாலை, ரயில் பாதை என்பவற்றை தனியாருக்கு விற்கத் தயாராவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் ஆதரவு வழங்குவது துர்ப்பாக்கியம் எனவும் தெரிவித்தார்.
சம்பிரதாய ஐ.தே.க. வரவு செலவுத் திட்டமே இம்முறையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தகால கடன் சுமையை காரணங்காட்டி மக்கள் மீது சுமையேற்றப்பட்டுள்ளது எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.