சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

390 0

சிறிலங்காவில் கொரோனா (கொவிட் 19)வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும்  3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  இதுவரை 718 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.