சுவிட்ஸர்லாந்தில் இருந்து 9 இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாடு கடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிராஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில், பாலசுதன் யாழ்ப்பாணம், காண்டீபன் பருத்தித்துறை, சிவநேசன் பருத்தித்துறை ஆகியோர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஒன்பது பேரும் சுவிட்ஸர்லாந்து நாட்டின் சட்டதிட்டங்களை மீறி குடியேறியவர்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.