மீண்டும் அகதி படகு விபத்து – நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி

339 0

tamilmission-com-203சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகள் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய தரை கடல் வழியாக பயணித்த குறித்த படகில் 122க்கும் மேற்பட்டவர்கள் பயணித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் போது குறித்த வழியாக பயணித்த ஜேர்மன் சென்னை கப்பல் அங்கு விரைந்த நிலையில் 20 பேர் வரையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் மூழ்கியவர்களை தேடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.